ஜூன் 14ஆம் தேதி முதல் 50% பணியாளர்களுடன் சென்னை உயர்நீதிமன்றம், உயர் நீதிமன்ற மதுரை கிளை செயல்படும் என பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருந்தது. இதன் விளைவாக பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்துகொண்டு வந்ததால் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்திருந்தது. மேலும் ஜூன் 14 ஆம் தேதியுடன் ஊரடங்கு முடிவடைய உள்ளதால் ஊரடங்கு நீடிப்பதா? என்பது குறித்து முதல்வர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்துவதாக தகவல் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தற்போது ஜூன் 14-ஆம் தேதி முதல் 50% பணியாளர்களுடன் சென்னை உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற மதுரை கிளை செயல்படும் என பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார். நீதிமன்ற ஊழியர்கள் இரண்டு பிரிவுகளாக பிரித்து இரண்டு நாட்கள் சுழற்சி முறையில் பணிக்கு வர வேண்டும். மறு உத்தரவு வரும் வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும். ஜூன் 30 வரை நீதிமன்ற பணிகள் ஆன்லைனில் தொடரும். ஜூன் 14-ஆம் தேதி அனைத்து நீதிபதிகளும் வழக்குகளை விசாரிப்பார்கள் என்று தெரிவித்துள்ளார்.