Categories
கிரிக்கெட் விளையாட்டு

ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட்…. இன்று முதல் ஆரம்பம் ….!!!

 ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் தொடங்குகிறது .

19 வயது உட்பட்டோருக்கான ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி கடந்த 1989-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது .இதுவரை இப்போட்டியில் இந்தியா 7 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது .இந்நிலையில் 9-வது ஜூனியர் ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் இன்று முதல் தொடங்குகிறது .அங்குள்ள துபாய், சார்ஜா ,அபுதாபி ஆகிய 3 மைதானங்களில் இப்போட்டி நடைபெறுகிறது .இப்போட்டி இன்று முதல் தொடங்கி வருகின்ற 31-ம் தேதி வரை நடக்கிறது .இதில் பங்கேற்கும் 8 அணிகள் 2  பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் ‘ஏ ‘பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் அணிகளும் ,    ‘பி’பிரிவில் இலங்கை,வங்காளதேசம், நேபாளம், குவைத் அணிகளும் இடம் பெற்றுள்ளது.இதில்  ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும் .லீக்  சுற்று முடிவில் 2 பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெறும் .இந்நிலையில் முதல் நாளான இன்று இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் அணியும்,பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணியும்,வங்காளதேசம்-நேபாளம் அணியும்  மோதுகின்றன .இந்திய நேரப்படி அனைத்துப் போட்டிகளும் காலை 11 மணிக்கு தொடங்குகிறது.

Categories

Tech |