சிறுமி ஒருவர் ஜூனியர் மாஸ்டர்செஃப் போட்டியில் கலந்து கொண்டு இலங்கை உணவுகளை சமைத்து பட்டத்தை வென்றுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் வசிக்கும் இலங்கையைச் சேர்ந்த சிறுமி ஜோர்ஜியா(11). இவர் “Junior Masterchef Australia 2020” என்ற போட்டியில் கலந்து கொண்டு சிறந்த சமையல் வல்லுநருக்கான கோப்பையை பெற்றுள்ளார். இந்த போட்டியின் இறுதி சுற்று ஆஸ்திரேலிய தொலைக்காட்சியான நெட்வொர்க் 10-ல் ஒளிபரப்பப்பட உள்ளது. மற்ற போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளிய இந்த இலங்கை சிறுமி 25,000ஆஸ்திரேலிய டாலர் பணத்தை பரிசாக வென்றுள்ளார். இதையடுத்து ஜோர்ஜியா உள்பட இறுதி சுற்றுக்கு தகுதியானவர்களுக்கு இரண்டு பிரதான உணவுகள் தயார் செய்யுமாறு கூறப்பட்டுள்ளது.
இதில் சிறுமி ஜோர்ஜியா இலங்கையின் தேசிய பொருட்களை வைத்து இரண்டு பிரதான உணவுகளை தயார் செய்திருக்கிறார். அந்த உணவிற்கு Tropical mess என பெயர் வைத்துள்ளார். இது குறித்து சிறுமி கூறுகையில், “என் பாட்டி இலங்கையை சேர்ந்தவர் என்பதால் அவர் எனக்கு இலங்கை உணவுகளை சமைக்க கற்றுக் கொடுத்தார். அதனால் தான் நான் இப்போது வெற்றி பெற்றுள்ளேன். மேலும் நான் வென்ற இந்த பணத்தை சமையல் சார்ந்த விஷயங்களுக்காக மட்டும் செலவிட போகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.