17,00,000 செலவு செய்து தனது சொகுசு காருக்கு ஜூனியர் என்டிஆர் நம்பர் வாங்கியது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது
தெலுங்கு திரைப்பட உலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் ஜூனியர் என்டிஆர். இவர் நடிக்கும் திரைப்படங்களுக்கு தென்னிந்தியாவில் அமோக வரவேற்பு இருந்துவரும் நிலையில் தற்போது எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் இவர் நடிக்கும் RRR திரைப்படத்தையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் 3.16 கோடி மதிப்புடைய லம்போர்கினி காரை ஜூனியர் என்டிஆர் அவர்கள் சமீபத்தில் வாங்கியுள்ளார். பல கோடி செலவு செய்து கார் வாங்குபவர்கள் அதற்கென்று தனித்துவமான வாகன எண் வாங்குவது வழக்கம். அதேபோன்று ஜூனியர் என்டிஆர் 17 லட்சம் ரூபாய் செலவு செய்து தனக்கென்று தனித்துவமான TS09 FS 9999 என்ற எண்ணை தனது சொகுசு காருக்கு வாங்கியுள்ளார்.