விஜய்யுடன் இணைந்து தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் புதிய படத்தில் நடிக்கவுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஜய். மாஸ்டர் பட வெற்றியைத் தொடர்ந்து விஜய் தற்போது தளபதி65 படத்தில் நடித்து வருகிறார்.நெல்சன் திலீப்குமார் இயக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் விஜயும் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆரும் இணைந்து புதிய படத்தில் நடிக்க உள்ளார்கள் என்று தெலுங்கு திரையுலகில் தகவல் பரவி வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் உருவாகும் இப்படத்தை அட்லி இயக்க போவதாகவும் சொல்லப்படுகிறது.
ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. ஆகையால் இணையத்தில் பரவும் செய்திக்கு சம்பந்தப்பட்டவர்கள் பதிலளிக்க வேண்டுமென்று ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்து கொண்டிருக்கின்றனர்.