கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மத்திய ரயில்வே இணை மந்திரி சுரேஷ் அங்காடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவி பாரபட்சமின்றி அணைத்து துறையை சேர்ந்தவர்களையும் பதித்து உயிர் பலியும் எடுத்து வருகிறது. அந்த வகையில் மத்திய ரெயில்வேயின் இணை மந்திரியான சுரேஷ் அங்காடி கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டது உறுதியானது.
இதனையடுத்து கடந்த 11ஆம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் சுரேஷ் அங்காடி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தவர்களில் சுரேஷ் அங்காடி 4ஆவது பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.