ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டியில் இன்றைய ஆட்டத்தில் இந்தியா – போலந்து அணிகள் மோதுகின்றன.
ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது .இதில் பங்கேற்றுள்ள மொத்தம் 16 அணிகள் 4 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதி வருகின்றன. இதில் லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு முன்னேறும். இதில் இன்று நடைபெறும் ‘பி ‘பிரிவில் கடைசி லீக் ஆட்டத்தில் இந்தியா- போலந்து அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதில் இரு அணிகளுமே ஒரு வெற்றி , ஒரு தோல்வி என 3 புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளது .
அதேசமயம் கோல் வித்தியாசத்தின் அடிப்படையில் இந்திய அணி புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது .எனவே இன்றைய போட்டியில் இந்திய அணி வெற்றி அல்லது போட்டியை டிரா செய்தால் அடுத்த சுற்றுக்கு முன்னேறும் .மாறாக தோல்வியடையும் பட்சத்தில் தொடரில் இருந்து வெளியேறும். இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது .