Categories
விளையாட்டு

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி : அரையிறுதியில் இந்திய அணி அதிர்ச்சி தோல்வி …..!!!

ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டியில் நேற்று இரவு நடந்த 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்து .

12-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவில் தலைநகர் புவனேஸ்வரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது .இதில் நேற்று இரவு 7.30  மணிக்கு நடந்த 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா-  ஜெர்மனி அணிகள் பலப்பரீட்சை நடத்தின .இதில் ஆட்டத்தின்  தொடக்கத்திலிருந்தே  ஜெர்மனி அணி ஆதிக்கம் செலுத்தியது.

இறுதியாக4-2  என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்ற ஜெர்மனி அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. இதனிடையே வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் இந்திய அணி முதல் அரையிறுதியில் தோல்வியடைந்த பிரான்ஸ் அணியுடன் மோத உள்ளது.

Categories

Tech |