Categories
விளையாட்டு

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி : அரையிறுதியில் வெற்றி யாருக்கு ….? இந்தியா-ஜெர்மனி இன்று மோதல் …..!!!

ஜூனியர் உலக கோப்பை ஹாக்கி போட்டி இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில்  இந்தியா-ஜெர்மனி அணிகள் மோதுகின்றன.

12-வது ஜூனியர் உலகக் கோப்பை ஹாக்கி போட்டி ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்று வருகிறது.இதில் இன்று நடைபெறும் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி பலம் வாய்ந்த ஜெர்மனி அணியுடன் மோதுகிறது .இதற்கு முன்னதாக நடந்த காலிறுதி ஆட்டத்தில் பெல்ஜியம் அணியை வீழ்த்தி 1-0 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அசத்தல் வெற்றி பெற்றது.

இதனால் இன்றைய போட்டியிலும் ஜெர்மனியை வீழ்த்தி வெற்றி பெறும் முனைப்புடன் இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெறுகிறது .இதற்கு முன்னதாக மாலை 4.30 மணிக்கு நடைபெறும் மற்றொரு அரையிறுதி ஆட்டத்தில் பிரான்ஸ் – அர்ஜென்டினா அணிகள் மோதுகின்றன.

Categories

Tech |