Categories
உலக செய்திகள்

வியாழன் கோளின் நிலவில் ஆராய்ச்சி.. இந்த நிறுவனத்துடன் நாசா ஒப்பந்தம்..!!

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வியாழன் கோளில் உள்ள 80 நிலவுகளில் ஒன்றாக இருக்கும் யூரோப்பாவில் ஆராய்ச்சி செய்ய நாசா விண்வெளி ஆராய்ச்சி மையம் ஸ்பேஸ் எக்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்திருக்கிறது. அதாவது யூரோப்பா மனிதர்கள் வாழ ஏற்ற இடமா? என்பதை ஆராய வரும் 2024 ஆம் வருடத்தில் ஆய்வுகலனை அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஃபால்கன் கனரக ராக்கெட் உபயோகப்படுத்தப்படுகிறது. அதாவது இந்த ஃபால்கன் ராக்கெட் 23 அடுக்குகளை உடையது. மேலும், உலகிலேயே இரண்டாவதாக உபயோகிக்க கூடிய வகையில் தற்போதைக்கு செயல்பாட்டில் உள்ள அதிக சக்தியுடைய ராக்கெட்டும் இது தான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |