Categories
அரசியல் மாநில செய்திகள்

அட பாவமே.! வெறும் 11 ஓட்டு தானா ? ….. ”அதோ கதியில் நாம் தமிழர்”….. பரிதாபத்தில் சீமான் …!!

நடந்து முடிந்த சட்டமன்ற இடைத்தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி மிகவும் சொற்ப அளவுக்கு சரிந்துள்ளது.

இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்தவகையில்  தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி , புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு அக்டோபர் 21_ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுமென்று அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து தமிழகம் , புதுவை இடைத்தேர்தலில் திமுக , அதிமுக கூட்டணி கட்சிகள் போட்டியிட்டதை போல நாம் தமிழர் கட்சியும் வேட்பாளரை அறிவித்து போட்டியிட்டது.நாம் தமிழர் கட்சியின் சார்பில் புதுவை காமராஜ் நகர் தொகுதியில் ப்ரவீனா_வும் , விக்ரவாண்டியில்  கந்தசாமி_யும்  , நாங்குநேரியில் ராஜநாராயணனும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். தேர்தல் நடைபெற்று அதற்கான முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் அறிவிக்கப்பட்டது.

அந்தவகையில் நாம் தமிழர் கட்சியின் நாங்குநேரி வேட்பாளர் ராஜநாராயணன் 3494 வாக்குகளும் விக்கிரவாண்டி வேட்பாளர் கந்தசாமி 2921 வாக்குகளும் , புதுச்சேரி காமராஜ் நகர் வேட்பாளர்  ப்ரவீனா 620 வாக்குகளும் பெற்றனர். இந்த 3 தொகுதிகளிலும் 7,043 வாக்குகள் மட்டும் பெற்றுள்ளனர். மூன்று தொகுதியையும் சேர்த்து பதிவாகிய 3,83,593 வாக்கில் இது 1.83 சதவீதம் ஆகும் .

தொகுதி வாரியாக நாம் தமிழர் பெற்ற வாக்கு மற்றும் சதவீதம் : 

நாங்குநேரி வேட்பாளர்  ராஜநாராயணன் பெற்ற வாக்குகள் 3494. இது 2.05 %

விக்கிரவாண்டி வேட்பாளர் கந்தசாமி பெற்ற வாக்குகள் 2921. இது 1.55 %

புதுச்சேரி காமராஜ் நகர் வேட்பாளர்  ப்ரவீனா பெற்ற வாக்குகள் 620 . இது  2.55 %

வாக்குச்சாவடிகள் : 

இந்த 3 சட்டமன்ற தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 606 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டது. வாக்குச்சாவடி வாரியாக மொத்தமாக நாம் தமிழர் கட்சி பெற்ற வாக்கை கணக்கீட்டால் 11.62 %  கிடைத்துள்ளது நாம் தமிழர் கட்சியினரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இந்த வகையில் பார்த்தால் அக்கட்சிக்கு வாக்குச்சாவடி வாரியாக விழுந்த வாக்குகள் வெறும் 11.

நாங்குநேரியில் அமைக்கப்பட்ட  299 வாக்குசாவடியில் வேட்பாளர் ராஜநாராயணன் பெற்ற வாக்குகள் 3494 இது 11.68  % ஆகும் .

விக்கிரவாண்டியில் அமைக்கப்பட்ட  275 வாக்குச்சாவடியில் வேட்பாளர் கந்தசாமி பெற்ற வாக்குகள் 2921. இது  10.62 % ஆகும் .

புதுச்சேரி காமராஜ் நகரில் அமைக்கப்பட்ட  32 வாக்குச்சாவடிகள் வேட்பாளர் ப்ரவீனா பெற்ற வாக்குகள் 620 . இது 19.37 % ஆகும் .

எப்படி பார்த்தாலும் வாக்குசாவடியில் வாக்குபதிவின் போது அக்கட்சி முகவர்கள் இருப்பார்கள். அந்த வகையில் வாக்குச்சாவடிக்கு வெறும் 11 வாக்குகள் மட்டும் பெற்றது நாம் தமிழர் கட்சியை கடும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. அதே வேளையில் இந்த தேர்தலில் மக்கள் நீதி மய்யம் , அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிட்டால் நாம் தமிழர் கட்சி அதோ கதி தான் என்பதை விவரங்கள் சொல்கின்றது.

Categories

Tech |