Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறும் 12 தான்…. இது தான் திமுகவின் பெண் சமத்துவமா…? – எழுந்துள்ள சர்ச்சை…!!!

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து அரசியல் கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஒவ்வொரு கட்சியிலும் கூட்டணி குழப்பமும், தொகுதி பங்கிடுவதில் இழுபறியும் நீடித்து வருகிறது. இதனால் தேர்தல் களம் பரபரப்பாக உள்ளது. இதையடுத்து ஒவ்வொரு கட்சியிலும் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு வருகின்றது. இதையடுத்து தற்போது தேர்தலுக்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்நிலையில் இன்று திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் தமிழகம் முழுவதுமாக 173 தொகுதிகளில் திமுக போட்டியிடுகிறது. ஆனால் இதில் வெறும் 12 பெண் வேட்பாளர்களுக்கு மட்டுமே இடம் அளித்துள்ளது. பெண் சமத்துவம் பேசும் திமுக குறைந்த அளவில் பெண்களுக்கு இடம் ஒதுக்கியுள்ளது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. சின்னம்மாள், தமிழரசி, சிவகாமசுந்தரி, கயல்விழி, சுப்புலட்சுமி ,ஜெகதீசன், ஜீவா ஸ்டாலின், ரேகா பிரியதர்ஷினி ,சீதாபதி சொக்கலிங்கம், வரலட்சுமி, கீதாஜீவன், பூங்கோதை ஆலடி அருணா ஆகிய 12 பெண்களுக்கு மட்டுமே திமுகவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |