செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், கரும்பு கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள், வஞ்சிக்காதீர்கள் என்று தோழமைக் கட்சிகள் சொல்லி இருக்கிறது, அண்ணண் எடப்பாடியார் சொல்லி இருக்கிறார், ஊர் ஊராக சொல்லி கொண்டு இருக்கிறோம். கரும்பு இல்லாத பொங்கல் உண்டா? பொங்கலுக்கே கரும்பு தான் முக்கியம். பல்லு இருக்கின்றவர்கள் எல்லாம் கரும்பை கடிப்பார்கள். எனக்கு 32 பல்லு இருக்குது அதனால பிரச்சனை இல்லை.
ஏவா வேலுக்கு பல் இருக்கிறதா ? இல்லையா என்று தெரியவில்லை. அதனால் கரும்பு வேண்டாம் என்று சொல்கிறார் போல… அதனால் கரும்பை பொறுத்தவரையில் எல்லோருக்குமே விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்து, அது ரேஷன் கார்டு மூலமாக பொங்கலுக்கு அளிக்க வேண்டும் என்பது விவசாயிகளுடைய கோரிக்கை, அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய கோரிக்கை, அண்ணன் எடப்பாடியார் அறிக்கை விட்டிருக்கிறார். எக்காரணத்தைக் கொண்டும் கரும்பு கொள்முதல் செய்யாவிட்டால், அது விவசாயிகளுக்கு செய்கின்ற மிகப்பெரிய துரோகம்.
திமுகவின் பொங்கல் பரிசை ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்ற யானை பசிக்கு சோளப்பொறி. எதிர்பார்த்தது அவ்வளவு.. ஆக மொத்தத்தில் சோள பொறி மாதிரி போட்டு விட்டார்கள். என்னோடது சொத்து விவரம் எல்லாம் தெளிவாகதேர்தல் ஆணைய அபிடவிட்ல இருக்கே. இன்னைக்கும் கூட வலைதளத்தில் தேடிப்பாருங்கள் எவ்வளவு சொத்து இருக்கிறது என்று அதெல்லாம் தாராளமாக பார்த்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
என்னுடைய சட்டை வந்து ஒரு ஆயிரம் ரூபாய், அது ஒருதடவை போடுவது இல்லை, நிறைய தடவை போடுகின்றோம். துவைச்சு துவைச்சு தான் போட முடியும். வேஷ்டியையும் துவைச்சு, பேட்டா செருப்பு தான் போடுகிறேன், நான் என்ன ? 25,000 ரூபாய் உள்ள ஷூவா போடுகிறேன் ஸ்டாலின் மாதிரி… இந்த செருப்பை போட்டு தானே லண்டனுக்கே போனேன், 299 ரூபாய் பேட்டா செருப்பை தான் இப்போது போட்டுக் கொண்டு இருக்கிறேன், என் காலுக்கு அழகே பேட்டா தான்.
ஒன்றுபட்ட அதிமுக தான் நாங்கள், அண்ணன் எடப்பாடி தலைமையில் கிளைக் கழகத்தில் இருந்து, தலைமைக் கழகம் நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்களில் இருந்து… அமைப்பு செயலாளர் இருந்து எல்லாருமே ஒன்றுபட்ட அண்ணா திமுக தான். இன்றைக்கு தலைவர், அம்மா வழியில் கொண்டு போய் கொண்டு இருக்கிறோம். எனவே அதிமுக பிளவுபட்டு உள்ளது என்ற கேள்விக்கு அர்த்தம் இல்லை என தெரிவித்தார். அதிமுக எதிர்ப்பை அடுத்து திமுக பொங்கலுக்கு முழு கரும்பை அறிவித்தது குறிப்பிடத்தக்கது.