தமிழகத்தில் இன்னும் சமூக பரவல் ஏற்படவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலத்தில் தமிழக முதல்வர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது, ஒரு வீட்டில் தொற்று ஏற்பட்டால், நாம் எல்லாரையும் பரிசோதனை செய்வோம். அவர்களின் தொடர்பில் உள்ளவரை கண்டறிகின்றோம். சமூகப் பரவல் கிடையாது. சமூக பரவல் என்றால் உங்கள் எல்லாருக்கும் வந்து இருக்கும். நீங்க யாரு முன்னாடி இருக்க முடியாது. யாரும் என் பின்னாடி இருக்க முடியாது. இருப்போ இவ்வளவு பேர் நின்னுட்டு இருக்குறாங்க. பத்திரிகையாளர்கள், அதிகாரிகள் இருக்காங்க இதுல ஏற்பட்டால் தான் சமூக பரவல்.
ஏதாவது ஒரு இடத்தில் இருந்து தொற்று ஏற்பட்டு, அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்களை பரிசோதனை செய்து அதிகமானோரை கண்டறிந்துள்ளோம். சென்னையை பொறுத்தவரை உங்களுக்கு நல்லா தெரியும், மக்கள் நிறைந்த ஒரு நகரம். குறுகலான தெரு, சின்ன சின்ன தெரு தான் இருக்கும்.ஆர்கே நகர் இடைத்தேர்தல் வரும்போது வீடுவீடாக ஓட்டு கேட்டு போகும் போது, வெறும் மூன்று அடி சந்து, அதுல 30 வீடு இருக்கு. அப்ப ஒருத்தர், ரெண்டு பேருக்கு தொற்று ஏற்பட்டு விட்டால் எல்லாருக்குமே பரவி விடுகின்றது.
இந்த தொற்று எளிதாக ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவக் கூடிய நோய். இது ஒரு புதிய வைரஸ் நோய். இதுக்கு இன்னும் மருந்து கண்டுபிடிக்கல. மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்களின் சிறப்பான சிகிச்சையின் காரணமாகத்தான் இதுவரைக்கும் 19300 பேரை குணமடைய வைத்துள்ளோம். இது சாதாரண விஷயமல்ல, மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவ பணியாளர்களும், தூய்மை பணியாளர்களும் தன்னையே அர்ப்பணித்து கொண்டு பணியாற்றிக்கொண்டு இருக்கின்றார்கள்.