நாங்குநேரி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 95,377 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இந்தியா முழுவதும் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகள் , பாராளுமன்ற தொகுதிகளுக்கான தேர்தலை மகாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டமன்ற தேர்தலோடு நடைபெற்றுமென்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்த வகையில் கடந்த 21_ஆம் தேதி ஒட்டு மொத்த தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் தமிழகத்தின் விக்கிரவாண்டி , நாங்குநேரி ஆகிய தொகுதிக்கும், புதுச்சேரி மாநிலத்தின் காமராஜ் நகர் தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது.
இதில் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியின் திமுக கூட்டணி காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ரூபி மனோகரனும் , அதிமுக சார்பில் நாராயணனும் , நாம் தமிழர் கட்சி சார்பில் ராஜ நாராயணன், பனங்காட்டுப்படை கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ஹரிநாடார் போட்டியிட்டனர்.இதில் முதல் சுற்றில் இருந்து ஆதிக்கம் செலுத்திய அதிமுக வேட்பாளர் நாராயணன் 95,377 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
இதனால் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை 33,445 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 62,932 வாக்கும் , பனங்காட்டுப்படை கட்சியின்வேட்பாளர் ஹரிநாடார் 4,014 வாக்குகளும் , நாம் தமிழர் வேட்பாளர் ராஜ நாராயணன் 3494 வாக்கும் பெற்று அடுத்தடுத்து இடங்களை பிடித்தனர். இதனால் நாங்குநேரி சட்டமன்ற தொகுதியில் நாம் தமிழர் கட்சி நான்காம் இடத்துக்கு தள்ளப்பட்டது.