நாமக்கல் நடுகொம்பை ஊராட்சி மன்ற தலைவர் பதவியில் போட்டியிட்ட அதிமுக எம்எல்ஏ சந்திரசேகர் மகன் யுவராஜ் தோல்வியடைந்துள்ளார்.
தமிழகத்தில் இரண்டுகட்டமாக நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இன்று காலை 8 மணி முதல் நடைபெற்று வருகின்றது.மாவட்ட கவுன்சிலர் , ஒன்றிய கவுன்சிலர் பதவிகளில் சரிக்கு சமமாக திமுக , அதிமுக இடம்பெற்று வருகின்றது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் நடுகொம்பை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக எம்எல்ஏ சந்திரசேகர் மகன் யுவராஜ் மற்றும் திமுகவின் அழகப்பர் ஆகியோர் போட்டியிட்டனர். இதில் இன்று நடைபெற்ற வாக்குப்பதிவு எண்ணிக்கையின் படி திமுக வேட்பாளர் அழகப்பன் விட 4 வாக்குகள் மட்டுமே குறைவாக பெற்று யுவராஜ் தோல்வியை சந்தித்து இருக்கிறார்.