அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்க தொடர்ந்து காலதாமதம் ஆகி வருவது பல விவாதங்களை எழுப்பியுள்ளது.
வழக்கமான நடைமுறையில் தேர்தல் நடந்து இருந்திருந்தால் அமெரிக்க அதிபர் யார் என்பது இந்திய நேரப்படி நேற்று மதியமே தெரிந்திருக்கவேண்டும். ஏனென்றால் 2016ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபர் ரொனால்ட் டிரம்ப் தான் என்பது இந்திய நேரப்படி மதியம் ஒரு மணிக்கு எல்லாம் தெரிந்து விட்டது. ஆனால் அந்த தேர்தலை போல் இல்லாமல் இந்தத் தேர்தலானது முற்றிலுமாக மாறுபட்டு இருக்கிறது. காரணம் என்னவென்றால் 120 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு மிக அதிக அளவிலான வாக்குகள் பதிவாகி இருக்கின்றன. 120 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு 67 சதவீதம் அளவிற்கு வாக்குகள் பதிவாகி இருக்கின்றது.
120 ஆண்டுகளில் இல்லாத அளவு:
வழக்கமாக அமெரிக்க அதிபர் தேர்தலில் வாக்கு சதவீதமானது 50திலிருந்து 60க்குள்ளாகவே இருக்கும். கடந்த தேர்தலில் 59 சதவீதம் அளவிற்கு வாக்குகள் பதிவாகின. இந்த தேர்தலில் அதை விட மிக அதிகமாக அமெரிக்க ஆய்வாளர்கள் கூறுவது போல் 120 ஆண்டுகளில் இப்படி ஒரு வாக்குகள் பதிவானது இல்லை.அது மட்டுமல்லாமல் முன்கூட்டியே வாக்களிக்க கூடிய நடைமுறை இந்த தேர்தலில் பயன்படுத்தபட்டுள்ளது. இதனால் தேர்தலுக்கு முன்பாகவே வாக்களித்தவர்கள் எண்ணிக்கையானது 10 கோடி ஆக உள்ளது.
6 கோடி தபால் வாக்குகள்:
ஒட்டுமொத்த வாக்குப்பதிவான 16 கோடியில் 10 கோடி பேர் முன்கூட்டியே வாக்களித்து விட்டார்கள். முன் கூட்டியே வாக்களித்த 10 கோடியில் வாக்கில் 6 கோடி பேர் தபால் மூலமாக வாக்களித்திருக்கிறார்கள். இந்த தபால் வாக்குகளின் எண்ணிக்கையை உடனடியாக தொடங்க முடியாது. பல மாநிலங்கள் தபால் வாக்குகள் எப்போது வருகின்றனவோ அப்போதே உடனுக்குடன் பிரித்து எண்ணத் தொடங்கி விட்டனர். ஆனால் சில மாநிலங்கள் விஸ்கான்சின், பென்சில்வேனியா, மிச்சிகன் போன்ற மாநிலங்களில் உடனடியாக தபால் வாக்குகளை எண்ண மாட்டோம். தேர்தல் நாளன்று தான் வாக்குகளை எண்ணுவோம் என்று கூறி விட்டனர்.
ஜோ பைடன் 264:
அதன்படி தான் தபால் வாக்குகள் தற்போதுதான் எண்ணப்பட்டு வருகின்றன. அவற்றையெல்லாம் கைகளால் ஒன்றன்பின் ஒன்றாக என்ன வேண்டியிருப்பதால் தாமதமாகிறது.கொரோனா காரணமான விதிமுறை காரணமாகவும் முடிவுகள் தாமதமாக வந்து இருக்கின்றது. அசோசியேட் பிரஸ் என்று சொல்லக்கூடிய மிக நம்பகமான செய்தி நிறுவனம் அளித்த தகவலின் அடிப்படையில் தற்போது வந்திருக்கும் முடிவுகளின்படி ஜோ பைடன் 264 தேர்தல் சபை வாக்குகளை பெற்றிருக்கிறார். டிரம்ப் 214 வாக்குகளை பெற்றிருக்கிறார்.
அரிசோனா:
பாரம்பரியமிக்க செய்தி நிறுவனத்தின் தகவலின்படி இந்த தகவல் வந்துள்ளது. சில செய்தி நிறுவனங்கள் ஜோ பைடன் 253 என்று கூறியிருக்கிறார்கள். அதாவது அரிசோனா என்ற ஒரு மாநிலத்தில் உள்ள 11 தேர்தல் சபை வாக்குகளையும் ஜோ பைடன் கைப்பற்றியிருக்கிறார். அரிசோனாவை ஜோ பைடன் கைப்பற்றியதை ஏற்கனவே அசோசியேட்டட் பிரஸ் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்கள் அறிவித்திருக்கின்றன. அந்த 11 எண்ணிக்கையும் சேர்த்து 264 ஜோ பைடன் பெற்றுள்ளார்.சில செய்தி நிறுவனங்கள் இதனை வழங்காத காரணத்தால் ஜோ பைடன் 253 என்று செய்திகளில் கூறுகின்றன.
தீர்மானிக்கு 6 வாக்குகள்:
அசோசியேட்டட் பிரஸ் தகவலின்படி இன்னும் 6 வாக்குகள் கிடைத்தால் போதும் ஜோ பைடனுக்கு. அதிபர் என்று அறிவிக்கப் படுவதற்கு 270 தேர்தல் சபைகள் கிடைத்தால் போதும். நெவாடா மாநிலம் என்ற ஒரு மாநிலம் இருக்கின்றது. அதில் தற்போது ஜோ பைடன் முன்னிலை வகித்து வருகிறார். அந்த மாநிலத்தில் 6 தேர்தல் சபை வாக்குகள் இருக்கின்றன. அந்த வாக்குகளை மட்டும் ஜோ பைடன் பெற்றால் தற்போது அமெரிக்க அதிபராக அவர் அறிவிக்கப்பட வாய்ப்பு இருக்கிறது.
மறு வாக்குப்பதிவு:
ஆனால் பென்சில்வேனியா, நார்த் கரோலினா, ஜார்ஜியா, அலாஸ்கா, ஜோ பைடன் முன்னிலை வகிக்கும் நெவாடா உள்ளிட்ட அனைத்து மாநிலங்களையும் டிரம்ப் கைப்பற்றவேண்டும். அவர் அப்படி அனைத்து மாநிலங்களையும் கைப்பற்றினால் மட்டுமே அதிபராக முடியும் என்ற ஒரு சூழல் இருக்கிறது. இப்படி ஒரு சூழலில்தான் பென்சில்வேனியா, விஸ்கான்சின், மிச்சிகன் மற்றும் அரிசோனா போன்ற மாநிலங்களில் தேர்தல் முடிவுகளை நிறுத்த வேண்டும், எண்ணிக்கை நிறுத்த வேண்டும், மறுவாக்குபதிவு நடத்த வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை டிரம்ப் தரப்பினர் வலியுறுத்தி இருக்கிறார்கள்.
மிகப்பெரிய மோசடி:
அரிஸோனா, மிக்சிகன் உள்ளிட்ட மாகாணத்தில் நீதிமன்றத்திற்கு சென்று விட்டார்கள். பென்சில்வேனியாவில் மறுவாக்குபதிவு நடத்த வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறார்கள். பென்சில்வேனியா மாநிலத்தில் தங்களுடைய பார்வையாளர்களை அனுமதிக்க வில்லை, தேர்தல் மிகப்பெரிய மோசடி நடைபெற்றுள்ளது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை வைத்துள்ளார்கள்.
36 நாட்கள் ஆகும்:
டிரம்ப்பின் இந்த குற்றசாட்டுகளை எந்த ஊடகமும், நடுநிலையாளர்கள் யாரும் ஏற்கவில்லை. அதற்கான ஆதாரம் இல்லை என்று கூறி இருக்கிறார்கள். தற்போது இப்படி ஒரு மிகப் பெரிய குற்றச்சாட்டு எழுந்ததன் காரணமாக நீதிமன்றத்திற்கு வழக்கு செல்வது உறுதியாகி விட்டது. அதன் காரணமாக இந்த முடிவை அறிவிக்கப் படுவதற்கு தாமதமாகும் என்பதும் உறுதியாகியுள்ளத. 2000 ஆவது ஆண்டில் அப்போது ஜார்ஜ் புஷ் இதே போல ஒரு சூழல் இருந்ததை தொடர்ந்து அதிபர் யார் என்று அறிவிக்க 36 நாட்கள் ஆகின. அப்படி ஒரு சூழல் மீண்டும் வரக் கூடும் என தெரிகின்றது.