83 என்ற திரைப்படத்திற்காக சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கபில்தேவ், ஸ்ரீகாந்த் நடிகர் ரன்வீர் சிங் ஆகியோர் நடத்திய கலந்துரையாடலை இந்த செய்தி தொகுப்பில் காணலாம்.
83 திரைப்பட முன்னோட்ட சிறப்பு நிகழ்ச்சியில் பேசிய கபிலதேவ், நான் தென்னிந்தியாவில் பிறக்கவில்லை இருப்பினும் சென்னை எனக்கு மிகவும் பிடிக்கும். நான் மட்டுமல்ல கிரிக்கெட் ஜாம்பவான்கள் அனைவருக்கும் சேப்பாக்கம் பிடிக்கும் என்று தெரிவித்தார்.
இதையடுத்து நடிகர் ரன்வீர் சிங் முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் உங்களுக்கு தமிழ் கற்று கொடுத்திருப்பார். ஆகையால் தமிழில் உங்களுக்கு தெரிந்த வார்த்தைகள் என்ன என்று கபில்தேவ்விடம் கேள்வி கேட்ட போது, முன்னாள் கேப்டன் ஸ்ரீகாந்த் தமிழில் கெட்ட வார்த்தை மட்டுமே எனக்கு சொல்லிக் கொடுத்தார் என தெரிவித்தார். இதைக் கேட்டதும் சுற்றி இருந்த பிரபலங்கள் குலுங்கி குலுங்கி சிரித்தனர்.