Categories
அரசியல் மாநில செய்திகள்

வெறும் நடிகர்…. அவர் ஒன்னும் MGR அல்ல… தோற்றுவிடுவார் – கே.எஸ் அழகிரி விமர்சனம் …!!

ரஜினியின் அரசியல் முடிவு குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார்.

இன்று சென்னை லீலா பேலஸ்சில் நடிகர் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர்  தேர்தல் பணியை செய்ய உருவாக்கப்படும் பதவிகள் தேர்தல் நேரத்தில் மட்டும் பயன்படுத்தப்படும். 35 – 40 % பதவி மற்ற கட்சிகளிலிடம் இருந்து வரும் நல்லவர்களுக்கு தரப்படும்.  ஆட்சியின் செயல்பாடுகளை கண்காணித்து தவறுகளைச் சுட்டிக் காட்டுவதே தலைமையின் பொறுப்பு.

முதல்வர் பதவியை என்னால் நினைத்து பார்க்க முடியாது. சட்டமன்றம் போய் , முதலமைச்சராக கேள்விக்கு பதில் சொல்ல நினைத்தது இல்லை. முதலமைச்சராக வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் எனக்கு இருந்தது கிடையாது.கட்சி தலைவராக இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம். படித்த தொலைநோக்கு சிந்தனை கொண்ட இளைஞரை முதலமைச்சராக்க வேண்டும்.

தமிழ்மக்களுக்காக அரசியல் புரட்சி நடக்க வேண்டும். புரட்சி நடக்காமல் , ஓட்டை பிரிக்க மட்டும் நான் அரசியலுக்கு வர வேண்டுமா ? வயது 71 ஆகிவிட்டது , உடலில் நிறைய காயங்கள் உள்ளன. எழுச்சி ஏற்படுத்துங்கள் , அரசியலுக்கு வருகிறேன்.வருங்கால முதல்வர் என்பதை விடுத்து எழுச்சி ஏற்படுத்துங்கள் அரசியலுக்கு வருகிறேன் என்று தெரிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்தின் இந்த கருத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது , ரஜினி கட்சி தொடங்குவார் என்ற நம்பிக்கை இன்னும் வரவில்லை. ரஜினி நல்ல நடிகர் , ஆனால் எம்.ஜி.ஆர் அல்ல என்பதால் அவருடைய முயற்சி வெற்றி பெறாது என விமர்சித்துள்ளார்.

Categories

Tech |