உலகப் புகழ்பெற்ற நாகூர் தர்கா கந்தூரி விழா இன்று இரவு கொடியேற்றத்துடன் துவங்குகிறது. இதற்க்கு நாகை மாவட்டத்தில் மட்டுமல்லாது, அனைத்து மாவட்டத்தில் உள்ள இஸ்லாமியர்களும் திரளாக பங்கேற்பார்கள். இன்று மதியம் கொடி ஊர்வலம் நாகையிலிருந்து தொடங்கி நாகூரில் முடிவடைந்து, இரவு 8 மணிக்கு கொடியேற்ற நிகழ்வு தொடங்கப்படும்.
இதனை தொடர்ந்து 14 நாட்கள் கந்தூரி விழாவானது நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வான சந்தனக்கூடு ஊர்வலம் வந்து இரண்டாம் தேதி நடைபெறுகிறது. அதனைத் தொடர்ந்து முக்கிய நிகழ்ச்சியான பெரியாண்டவருக்கு சந்தனம் பூசும் விழா மூன்றாம் தேதி நடைபெறும்.
இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 3ஆம் தேதி உள்ளூர் விடுமுறையை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனை ஈடு செய்யும் விதமாக 21ஆம் தேதி பள்ளி, கல்லூரிகள் செயல்படுவதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.