உலகம் முழுவதும் புதிய வகை கொரோனா தொற்று பரவி வருவதை கட்டுப்படுத்த உலக நாடுகள் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்தியாவிலும் புதிய வகை கொரோனா தொற்று பல மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளன. முன்னதாகவே மத்திய அரசாங்கம் அனைத்து மாநிலங்களுக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த உத்தரவு பிறப்பித்திருந்தது.
அதனைத் தொடர்ந்து மாநில அரசாங்கங்கள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் கூட்ட நெரிசலை தவிர்க்க அறிவுறுத்தி வருகிறார்கள். கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. சற்று முன் உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளிலும் மாஸ்க் கட்டாயம் அணிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உத்தரகாண்ட் மாநில பள்ளி கல்வித்துறை, மாணவர்கள் – ஆசிரியர்கள் -ஊழியர்கள் பள்ளிகளில் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.