Categories
உலக செய்திகள்

சீனாவிடம் தான் கேட்க வேண்டும். என்னை ஏன் கேட்கிறீர்கள்?” ஆவேஷமான டிரம்ப் ..!!

கொரோனா வைரஸ் தாக்கம் குறித்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் டிரம்ப் கடும் ஆவேசமடைந்தார்.

உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸ் அமெரிக்காவை சல்லிசாக சிதைத்துள்ளது. இதுவரை 13 லட்சத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 81 ஆயிரத்து தாண்டி உயிரிழப்பு சென்றுகொண்டிருக்கிறது. இந்நிலையில் நேற்று அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் செய்தியாளர்கள் சந்தித்தார். அப்போது சிபிஎஸ் செய்தி நிறுவனத்தின் செய்தியாளர் வெய்ஜியா ஜியாங், கொரோனா வைரஸால் மக்கள் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு நாளும் உயர்ந்து வரும் நிலையில் மற்ற நாடுகளைவிட அமெரிக்கா தான் அதிக பரிசோதனையை செய்து கொண்டிருப்பதாக போட்டி மனப்பான்மையில் நீங்கள் சொல்வது எதற்காக ? இதை ஏன் பெரிய விஷயமாக சொல்கிறீர்கள் என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு பதிலத்த டிரம்ப்,  உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பல மக்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். இந்த கேள்வியை நீங்கள் சீனாவிடம் தான் கேட்க வேண்டும். ஏன் என்னை நோக்கி கேட்கிறீர்கள் ? என்று காட்டமாக பதில் அளித்தார்.அதையடுத்து மீண்டும் அதே செய்தியாளர், ”அதை ஏன் என்னைப் பார்த்துக் கூற வேண்டும்?” என மறுகேள்வி கேட்டார். அதற்கு டிரம்ப், ”யார் இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தாலும் அவர்களுக்கு இப்படி தான் பதில் கூறியிருப்பேன்” என்றார். பின்னர் ஆத்திரமடைந்த ட்ரம்ப் செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே முடித்து விட்டு சென்றுவிட்டார். இது சர்ச்சையை கிளப்பியுள்ளது.

Categories

Tech |