Categories
அரசியல் மாநில செய்திகள்

கற்பனை செஞ்சு பாருங்க… தாங்க முடியல… ரொம்ப கஷ்டமா இருக்கு…! சீமான் கடும் வேதனை ..!!

செய்தியாளர்களிடம் பேசிய நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், மலைகளை நொறுக்கி, சிதைத்து, 80 லட்சம் டன்களுக்கு மேலான கற்களை கேரளாவில் விலிங்கத்தில் துறைமுகம் கட்டுவதற்காக அதானி அவர்களுக்கு கொண்டு செல்கிறார்கள். ஆனால் கேரளாவில் மீனவ மக்களோடு சேர்ந்து, இடதுசாரி தோழர்கள் அந்த துறைமுகமே எங்களுக்கு வேண்டாம் என்று போராடிக் கொண்டிருக்கிறார்கள், நான் வர வழியில் பார்த்தேன்.

காரணம் அது மண்ணரிப்பை ஏற்படுத்தும், வீடுகளுக்குள் நீர் புகுந்து, வீடுகள் எல்லாம் ஆக்கிரமிக்கப்படுகிறது என்பதனால் மக்கள் கொந்தளித்து போராடுகிறார்கள். இங்கே எங்களுடைய மலைகள் ஒன்று, இரண்டு, மூன்று என்று 16க்கும் மேற்பட்ட குவாரிகளாக தனியார் முதலாளிகளுக்கு ஒப்பந்தம் இடப்பட்டு, இயற்கையின் பெருங்குடையாக இருக்கின்ற பூமித்தாயின் மார்பகங்களாக உயர்ந்து நிற்கின்ற, மலைகள் நொறுக்கப்படுவது, உண்மையிலேயே இந்த மண்ணின் பிள்ளைகள் தாங்க முடியாத துயரத்தில் தவித்துக் கொண்டிருக்கிறோம்.

அதை தடுக்க முடியலையே என்கின்ற வலியும், வேதனையும் எங்களுக்கு ஆட்கொண்டு அழுத்துகிறது. அதிலிருந்து மீள முடியாத போது அரசு திடீரென்று அருமணல் நிறுவனத்திற்கு கடற்கரை 1,144 ஹெக்டர் அரசுக்கு…  சொந்தமானது 40 ஏக்கர் தான்,  ஆனால் 1,144 ஹெக்டரை தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்கிறது.

தாது மணலை அள்ளுவதற்கு..தங்கை காளியம்மாள் சொன்னது போல மண்ணை அள்ளிவிட்டால் மணல் துகளாகிவிடும். அது நீரை தேக்கவும் செய்யாது, தடுக்கவும் செய்யாது தூசு ஆகிவிடும். அப்படி இருக்கும்போது கடற்கரையில் வாழுகின்ற மீனவ குடிகளுக்கு என்ன பாதுகாப்பு ? அதில் எவ்வளவு வீடுகள் ஆக்கிரமிக்கப்படும் ? எவ்வளவு நிலங்கள் பாலாகும் ? என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்க்க வேண்டும் என சீமான் கூறினார்.

Categories

Tech |