தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் முதல் முறையாக இசைத்தட்டுக்கு பதில் தமிழ் தாய் வாழ்த்து பாடல் நேரடியாக பாடப்பட்டது. 16 வது சட்ட பிரிவின் இரண்டாவது கூட்டத் தொடரை வணக்கம் சொல்லி ஆளுநர் ரவி உரையை தொடங்கினார்.
ஆளுநர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அதனை தொடர்ந்து மத்திய அரசு நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்காததை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.