தமிழக போலீஸ் அதிகாரிகளுக்கு காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், கடந்த 2021 டிசம்பர் முதல் 2022 ஜனவரி வரை, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனைக்கு எதிராக தொடர் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது.
இந்த நடவடிக்கையை, ஏப்., 27 வரை, ‘ஆப்பரேஷன் கஞ்சா வேட்டை 2.0’ என்ற பெயரில் தொடர வேண்டும். மேலும் பள்ளி, கல்லுாரி அருகே, கஞ்சா, குட்கா உள்ளிட்ட போதை பொருள் விற்பனையை ஒழிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து கஞ்சா, குட்கா விற்பனையில் ஈடுபடுவோர் மீது குண்டர் சட்டம் போடப்படும் . மேலும் போதைப் பழக்கத்திற்கு அடிமையான மாணவர்களுக்கு மனநல ஆலோசனை வழங்க வேண்டும் என்று காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார்.