தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் பெரும்பாலான சாலைகளில் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் சுரங்க பாதைகளில் மழை நீர் புகுந்ததால் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. அதனை சரிசெய்யும் முயற்சியில் தமிழக அரசு தற்போது ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில் இனிவரும் காலங்களில் சுரங்க பாதைகளில் மழைநீர் தேங்காத வகையில் திட்டம் வகுக்கப்படும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். நிதி சுமை இருந்தாலும் சென்னையை ஒளிரச் செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுப்பார். இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு எட்டப்படும் என்று அமைச்சர் உறுதி அளித்துள்ளார்.
Categories