Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: இன்று பிற்பகல் விளக்கமளிக்க…. தமிழக அரசுக்கு உத்தரவு…!!!

கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் வன்னியருக்கு 10 புள்ளி 5 சதவீதம், சீர்மரபினருக்கு 7  சதவீதம், மற்ற பிரிவினருக்கு 2 புள்ளி 5 சதவீதம் வழங்கி முந்தைய அதிமுக அரசு சட்டம் நிறைவேற்றியது. இந்த சட்டமானது பிப்ரவரி முதல் அமலுக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்ட நிலையில் உடனடியாக அமலானது. பொறியியல் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப படிவத்தில் MBC(V ) என்ற பிரிவு சேர்க்கப்பட்டுள்ளது. மாணவர்கள் இட ஒதுக்கீடு அடிப்படையில் விண்ணப்பிக்கலாம் என அறிவித்திருந்தது.

இந்நிலையில் வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு அமல்படுத்தினால் பிற சமுதாயத்தினர் பாதிக்கப்படுவார்கள் என மனுதாரர்கள் கூறியுள்ள நிலையில் 10.5 சதவீத இட ஒதுக்கீடு நடப்பு கல்வியாண்டில் அமல்படுத்த உள்ளதா? என்று இன்று பிற்பகல் 2.15 மணிக்கு விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

Categories

Tech |