தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை அதிவேகமாக பரவி வருவதால் நாளுக்கு நாள் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்ய மயானத்தில் இடமில்லாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களின் உறவினர்கள் கதறுகின்றனர். அதுமட்டுமல்லாமல் ஆம்புலன்ஸ் சேவை, மயானத்தில் தகனம் செய்ய என்று அனைத்திற்கும் பணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் அதிக அளவு பாதிக்கப்படுகிறார்கள்.
இந்நிலையில் சென்னையில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வதில் குறைபாடு இருந்தால் புகார் அளிக்கலாம் என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. 044-25384520 மற்றும் 9498346900 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் அளிக்கலாம். இலவச அமரர் ஊர்தி சேவையை பெற 155377 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். அமரர் ஊர்தி, மயானங்களில் பணம் கேட்டாலோ, சேவை குறைபாடு இருந்தாலோ புகார் அளிக்கலாம். உடனே நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளது.