நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வந்த நிலையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கையை இழந்தனர். இதையடுத்து கொரோனாவிலிருந்து சற்று மீண்டு வந்த நிலையில் தற்போது கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுக்க தொடங்கியுள்ளது. இதனால் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மேலும் கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.
இது ஒரு புறம் இருக்க மறுபக்கம் கொரோனாவை கட்டுப்படுத்த தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து ஏப்ரல் 1ம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தடுப்பூசி போதிய அளவில் இருப்பு உள்ளதாகவும், இணைநோய் இல்லாதவர்களும் போட்டுக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளது.