தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. தற்போது வரை பல்வேறு கட்ட தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஒகேனக்கலில் இன்று முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஒகேனக்கல்லில்சுமார் ஆறு மாதங்களுக்கு பிறகு இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் பரிசல் பயணத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
அதன்படி காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அனுமதி. மாலை 4.30 மணிக்கு மேல் சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி இல்லை. கொரோனா தடுப்பூசி சான்றிதழை காட்டி ஒகேனக்கல் வரலாம். தடுப்பூசி செலுத்தாதவர்களுக்கு அனுமதி. சுற்றுலா தளத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள பிளாஸ்டிக் பொருட்களை தவிர்க்க வேண்டும். மசாஜ், சமையல், பரிசல் ஓட்டிகள் மற்றும் வணிகர்கள் அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என்ற பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.