தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் நடிப்பில் அண்மையில் வெளியான விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து தற்போது இந்தியன் 2 திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்துவரும் நிலையில் மறுபக்கம் பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகிறார்.
இதனிடையே கமல்ஹாசன் காய்ச்சல் காரணமாக நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நிலையில் அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், லேசான காய்ச்சல், இருமல் மற்றும் சளி காரணமாக கமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. இன்னும் இரண்டு நாட்களில் வீடு திரும்புவார் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.