நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் கர்ணன். இந்த படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் பலராலும் பேசப்படும் படமாகவும் இருக்கிறது. இந்நிலையில் மாரிசெல்வராஜுக்கு பலரும் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தூத்துக்குடியில் கர்ணன் படத்தை வெளியிட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து மர்மநபர்கள் பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். இதனால் அப்பகுதியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.