வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியானது தற்போதைய நிலவரப்படி சென்னையில் இருந்து 150 கிலோமீட்டர் தெற்கு, தென்மேற்கு திசையில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளதாகவும் 18 கிலோ மீட்டர் வேகத்தில் நகர்ந்து வருவதாகவும், நாளை சென்னை-புதுச்சேரி இடையே கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனால் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் முன்னெச்சரிக்கை காரணமாக , நீலகிரி திருப்பத்தூர், காஞ்சிபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கனமழை காரணமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.