காவிரி ஆற்றில் மருத்துவக் கழிவு, பூச்சிக்கொல்லி, உலோக கழிவுகள் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளிட்டவை கலக்காமல் இருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உறுதியளித்துள்ளார். காவிரியில் மருத்துவ மாசு அதிகம் உள்ளதா என்பதை ஆய்வு செய்வதற்கு மாசு கட்டுப்பாட்டு பொறியாளர்கள் மாதிரிகளை சேகரித்து உள்ளனர்.
காவிரி ஆற்றில்கழிவுகள் கலக்கப்படுகிறதா என்பதை கண்காணிப்பதற்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதையடுத்து அக்டோபர் 15-ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று மாசு கட்டுப்பாட்டு வாரியம் உத்தரவிட்டுள்ளது.