குளிர்கால நடப்பு கூட்டத் தொடரில் கிரிப்டோ கரன்சி ஒழுங்கு முறை மசோதாவை அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. அதன்படி அனைத்து தனியார் கிரிப்டோ கரன்சிகளை தடை செய்யவும் மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் நாணயம், கிரிப்டோ கரன்சி ஒழுங்குமுறை மசோதாவை தாக்கல் செய்ய மத்தியஅரசு முடிவு செய்துள்ளது.
இந்த நிலையில் பல வகையான கரன்சிகளின் மதிப்பு குறைந்துள்ளது. இந்த மாத தொடக்கத்தில் $69,000 ஆக இருந்த பிட்காயின் மதிப்பு தற்போது $55,406 ஆக சரிந்துள்ளது.