ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுக தொடர் தோல்விகளை சந்தித்து வர காரணம் அதிமுக இரண்டாக பிளவுபட்டது தான் என்று அக்கட்சியை சேர்ந்தவர்களே பேசத் தொடங்கிவிட்டனர். இந்நிலையில் தேனி மாவட்டம் கைலாசபட்டியில் உள்ள அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்திற்கு சொந்தமான பண்ணை வீட்டில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். அப்போது அதிமுக-அமமுக ஒன்றிணைக்கும் வரை அதிமுகவால் தேர்தலில் வெற்றி பெற முடியாது என தொண்டர்கள் தெரிவித்தனர்.
எனவே உடனடியாக அமமுகவை அதிமுகவுடன் இணைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். இந்நிலையில் ஓ.பி.எஸ் மற்றும் இ.பி.எஸ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடக்க உள்ளதையடுத்து, முன்னாள் அமைச்சர் வளர்மதி, சசிகலாவை கட்சியில் இணைப்பது குறித்து தலைமை முடிவெடுக்கும் என்றும், தலைமை என்ன முடிவு எடுத்தாலும் கட்டுப்படுவோம் என்று கூறியுள்ளார்.