சபரிமலையில் மண்டல பூஜைக்காக கடந்த 15ஆம் தேதி கோவில் நடை திறக்கப்பட்டு தினமும் சிறப்பு பூஜை நடந்து வருகிறது. 40 நாட்கள் தொடர்ச்சியாக மண்டல கால பூஜைகள் நடைபெறுகிறது. பக்தர்கள் மாலை அணிந்து, விரதமிருந்து சபரி மலைக்கு செல்வார்கள். அங்கு தினமும் 40 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு மூலம் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் ஏற்கனவே பக்தர்களுக்கு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில் கூடுதல் தளர்வாக சபரிமலை, பம்பை நதியில் இன்று முதல் பக்தர்களுக்கு குளிப்பதற்கும், சன்னிதானத்தில் பக்தர்கள் தங்கவும் இன்று முதல் அனுமதி அளித்து கேரள அரசு அறிவித்துள்ளது.