இன்று ஆவடி பகுதியில் உள்ள நரிக்குறவர் இன மக்களை முதல்வர் முக ஸ்டாலின் சந்தித்து பேசினார். அதன் பின்னர் திருமுல்லைவாயில் நரிக்குறவர் குடியிருப்பில் மக்களுக்கு குடும்ப அட்டை, கடன் உதவி, முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை முதல்வர் வழங்கினார். பின்னர் நரிக்குறவர் மாணவி இல்லத்தில் முதல்வர் ஸ்டாலின் இட்லி, வடை சாப்பிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முதல்வர் முக ஸ்டாலின், ஆவடியில் நரிக்குறவர் மாணவி வீட்டில் சாப்பிட்ட சாப்பாடு காரமாக இருந்ததாகக் கூறினேன். அதற்கு காரமாக சாப்பிட்டால் சளி, இருமல் வருவதில்லை என்று நரிக்குறவர் இன சமூகத்தினர் கூறியதாக தெரிவித்துள்ளார்.