நாடு முழுவதும் கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்து வருகிறது. இதனால் நேற்று முதல் தமிழகம் முழுவதும் இரவு நேர ஊரடங்கு அமல் படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு கட்டுப்பாடுகளும் அமலுக்கு வந்துள்ளன. அந்த வகையில் மதுக்கடையில் டோக்கன் முறை அமலுக்கு வந்துள்ளது. மேலும் நேரம் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னையில் ஏப்ரல் 25 மற்றும் மே 1 ஆகிய இரண்டு தேதிகளில் மதுபான கடைகள் மற்றும் பார்களை மூட மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மகாவீரர் ஜெயந்தி மற்றும் மே தினத்தை முன்னிட்டு இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.