தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த ஆண்டு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது மக்களுக்கு பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதிலும் குறிப்பாக முக கவசம் அணிவது மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிப்பது உள்ளிட்ட கட்டுப்பாடுகள் அமலில் இருந்தது. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் அரசு படிப்படியாக ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து வருகிறது. இருந்தாலும் வழிகாட்டு நெறிமுறைகள் நடைமுறையில் உள்ளன. ஆனால் மக்கள் சிலர் கொரோனா பாதிப்பு குறைந்தது அலட்சியமாக எடுத்துக் கொண்டு முகக்கவசம் அணியாமல் செல்கின்றனர்.
அதனால் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்கும் சூழல் நிலவி வருகிறது. இதற்கு மத்தியில் கொரோனா வகை ஒமைக்ரான் வைரஸ் தமிழகத்தில் அதி வேகமாக பரவி வருகிறது. அதனால் மீண்டும் பலத்த கட்டுப்பாடுகள் அமலாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் சென்னையில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருவதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வந்துவிட்டால் கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.