Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: ஜெய் பீம்- ஆரம்பத்திலேயே தவிர்த்திருக்கலாம்…. சீமான் கருத்து…!!

ஞானவேல் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் ஜெய் பீம் , தீபாவளி விடுமுறையை முன்னிட்டு இந்த மாதம் 2 ஆம் தேதி வெளியானது. நாட்டில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலமாக நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பது பற்றியும், பழங்குடியின மக்கள் சந்திக்கும் பிரச்சனை பற்றியும் இந்த திரைப்படத்தில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளது. படத்தைப் பார்த்த அரசியல் கட்சியினர் மற்றும் திரையுலகினர் பலரும் பாராட்டுகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். இருந்தாலும் படத்தில் வன்னியர் சமுதாயத்தை அவமதிக்கும் விதமாக சில காட்சிகள் இருப்பதாக கூறி பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

அதுமட்டுமல்லாமல் இந்த விவகாரம் தொடர்பாக ஜெய்பீம் படக்குழுவினர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் 5 கோடி ரூபாய் இழப்பீடு தரவேண்டும் என்றும் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்த படத்திற்கு நடிகர் சூர்யாவுக்கு பலரும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சீமான் ஜெய் பீம் படம் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதில் குறிப்பிட்ட சமூக மக்களின் வலியை வெளிப்படுத்துவதற்காக எடுத்து, இன்னொரு சமூக மக்களுக்கு வலி ஏற்படுத்த கூடாது. அதனை தவிர்த்திருக்கலாம் என்று கூறியுள்ளார்.

Categories

Tech |