தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமாக பரவி வந்த சூழலில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் மூடப்பட்டது. இதனையடுத்து கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் டாஸ்மாக் கடைகள் அனைத்தும் திறக்கப்பட்டன. கொரோனா தொற்று அதிகமுள்ள இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்கப்படமால் இருந்து வந்தன.
தொற்று குறைவாக உள்ள இடங்களில் டாஸ்மாக் கடைகள் காலை 10 மணி முதல் இரவு 8 மணி இயங்கிய நிலையில் டாஸ்மாக் கடைகள் முன்பு போல பிற்பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் டாஸ்மாக் மதுபான கடை நேரத்தை மாற்றியது குறித்து தமிழக அரசு, டாஸ்மாக் நிர்வாகம் பதில் தர உத்தரவிடப்பட்டுள்ளது.
முன்னறிவிப்பின்றி நேரம் மாற்றியதாக டாஸ்மாக் விற்பனையாளர்கள் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. காலை 10 இரவு 8 வரை இருந்ததை பகல் 12 மணி முதல் இரவு 10 மணி வரை மாற்றியதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது.