Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Just In: டிசம்பர் 8-ல் பாரத் பந்த்..! முடங்கப் போகிறது தேசம் …!!

மத்திய அரசு கொண்டு வந்த விவசாய வேளாண் மசோதா சட்டத்தை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியிலும் சரி,டெல்லி நோக்கி எல்லை பகுதியிலும் சரி, லட்சக்கணக்கான விவசாயிகள் குவிந்து கொண்டிருக்கின்றார்கள். ஆறு மாதங்களுக்குத் தேவையான உணவுகளுடன் விவசாயிகள் நடத்தி வரும் போராட்டம் உலக அளவில் பேசு பொருளாக மாறி உள்ளது.

இந்த நிலையில், விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய ஐந்தாம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் டிசம்பர் 9ஆம் தேதி அரசு தன் நிலைப்பாட்டை தெரிவிக்கும் என்றும், அதற்குள் விவசாய பிரதிநிதிகள் குழு ஆலோசனை செய்து அடுத்த கட்ட பேச்சுவார்த்தைக்கு தயாராக உள்ளதாகவும் விவசாய சங்கத்தினர் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே அறிவித்தபடி வருகின்ற டிசம்பர் 8-ஆம் தேதி நாடு தழுவிய பந்த் நடைபெறும் என்றும் அறிவித்துள்ளனர்.

 

Categories

Tech |