Categories
மதுரை மாவட்ட செய்திகள்

JUST IN: டெங்கு காய்ச்சல் பாதிப்பால் 7 வயது சிறுமி பலி…. பெரும் அதிர்ச்சி….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. அதனால் சாலைகள் அனைத்திலும் மழை நீர் வெள்ளம் போல தேங்கி நிற்கிறது. அதுமட்டுமல்லாமல் சுற்றுவட்டார பகுதிகளில் நிலவும் சுகாதார சீர்கேடு காரணமாக டெங்கு காய்ச்சல் தற்போது அதிக அளவு பரவ தொடங்கியுள்ளது. அதனால் மக்கள் தங்கள் சுற்றியுள்ள பகுதிகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று அரசு அறிவுறுத்தியுள்ளது.

இருந்தாலும் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தற்போது மேலும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இந்நிலையில் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே டெங்கு காய்ச்சல் பாதிப்பு காரணமாக 7 வயது சிறுமி மேகா உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமி, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

Categories

Tech |