தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழையின் காரணமாக அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழை வெளுத்து வாங்கியது. இதனால் நீர் நிலைகள் நிரம்பி வழிந்தன. எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மக்களுடைய இயல்பு வாழ்க்கை முடங்கியது.பருவமழை முடிந்து கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வறண்ட வானிலையே நிலவியது. இந்நிலையில் இன்று சென்னையில் கடந்த மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கனமழை பெய்தது.
திடீரென்று பெய்த கனமழையின் காரணமாக பசென்னியில் ல பகுதிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமம் அடைந்துள்ளனர். மெட்ரோ ரயில் நிலையத்திலும் கூட்டம் அலை மோதுகிறது. பல்வேறு பகுதிகளிலும் கடைகலுக்குள் மழை நீர் புகுந்தது. எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் போடப்பட்டிருந்த கூடாரங்கள் காற்றில் பறந்து சென்றன. இந்த நிலையில் சென்னையில் பலத்த மழையின் காரணமாக கடற்கரையிலிருந்து பாரிமுனை செல்லும் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.