Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு… முதல்வர் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகம் முழுவதும் செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகளை திறப்பதற்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளில் ஒரே நேரத்தில் 50 சதவீதம் மாணவர்களுடன் பள்ளிகளை துவங்குவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக  முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். முக ஸ்டாலின் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் மற்றும் மருத்துவ நிபுணர்கள், உயர் அதிகாரிகள், ஆகியோருடன் தலைமைச் செயலகத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

அனைத்து தரப்பு கருத்துக்களையும் கேட்டு அதன்படி செப்டம்பர் 1ஆம் தேதி முதல் பள்ளி துவங்குவதற்கு, அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் பயிற்சி உள்ளிட்ட மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் ஆகஸ்ட் 16ம் தேதியிலிருந்து செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

Categories

Tech |