உலகம் முழுவதும் உருமாறிய பிஎப் 7 கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உலக சுகாதார மையம் உலக நாடுகளுக்கு பல்வேறு விதமான ஆலோசனைகளையும் அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. அந்த வகையில் இந்தியாவிலும் மத்திய, மாநில அரசுகள் கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கான பல்வேறு விதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தமிழக அரசின் புதிய வகை கொரோனாவை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு விதமான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்று கேள்வி எழுந்த நிலையில் அதற்கு அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அமைச்சர் பேட்டியில் கூறியதாவது, தமிழகத்தில் புத்தாண்டு, சமய விழாக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் நடத்தும் நிகழ்ச்சிகள் என எதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவில்லை. பொதுமக்கள் சுய கட்டுப்பாடுகளை தான் பின்பற்ற வேண்டும் என்று கூறியுள்ளார்.