Categories
மாநில செய்திகள்

JUST IN: தமிழகத்தில் 3-வது அலை…. மீண்டும் கடும் ஊரடங்கு…. பரபரப்பு….!!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வந்தது. அதன் பிறகு தமிழக அரசு ஊரடங்கு தளர்வுகளை படிப்படியாக அறிவிக்க தொடங்கியது. ஆனால் கடந்த ஒரு வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தமிழகத்தில் மேலும் 2 வாரங்கள் ஊரடங்கு நீக்கப்படுவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் பாதிப்பு அதிகம் உள்ள மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா அதிகரிக்கும் மாவட்டங்களில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை கடுமையாக்க வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். தமிழகத்தில் கொரோனா மூன்றாவது அலை வரக்கூடாது, தொற்று அதிகரிக்கக் கூடாது என்றால் கட்டுப்பாடுகளை இப்போதே கடுமையாக்க வேண்டும். கடைகளை 5 மணியுடன் மூட உத்தரவிட வேண்டும். மக்கள் பொறுப்பை உணரவும் பயணத்தை தவிர்க்கவும் என கூறியுள்ளனர்.

Categories

Tech |