Categories
அரசியல் சற்றுமுன் மாநில செய்திகள்

JUST IN: தமிழகம் முழுவதும் டிச.,9-ல் ஆர்ப்பாட்டம்…. ஓபிஎஸ்-ஈபிஎஸ் அறிவிப்பு…!!!!

வரும் 13 ம் தேதி முதல் 23ம் தேதி வரை அதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 3 மற்றும் 4ம் தேதிகளில் நடைபெற்றது. ஓபிஎஸ் மீண்டும் ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும், எடப்பாடி பழனிச்சாமி இணை. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் விருப்பம் தெரிவித்து வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர் அவர்களில் முன்னாள் அமைச்சர்கள், தலைமை கழக நிர்வாகிகள் என பலரும் வேட்பு மனு அளித்தனர். இந்த நிலையில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் வேட்புமனுக்கள் மீதான மறுபரிசீலனை நேற்று நடைபெற்றது. இதில் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகியோர் மனுக்களை தவிர மற்றவை நிராகரிக்கப்பட்டது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர்கள் பதவிக்கு போட்டி ஏற்படாததால் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு இல்லாமல் போனது. இதன்மூலம் ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் ஆகிய இருவரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக இன்று அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் ஓபிஎஸ் ஈபிஎஸ் சார்பாக அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் மக்கள் பிரச்சினைகளில் கவனம் செலுத்தாத திமுக அரசைக் கண்டித்து டிசம்பர் 9ஆம் தேதி தமிழகம் முழுவதும் அதிமுக சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |