தமிழகம் முழுவதும் 3119 மையங்களில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறுகின்றது. இந்த பொது தேர்வை 8 லட்சத்து 83 ஆயிரத்து 884 மாணவர்கள் எழுதுகின்றனர். தேர்வை கண்காணிக்க 1,000 பறக்கும் படைகள் மற்றும் நிலையான குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இன்று தொடங்கும் பதினோராம் வகுப்பு பொதுத்தேர்வு மே மாதம் 31ஆம் தேதி முடிவடையும் என்றும், பதினோராம் வகுப்பு முடிவுகள் ஜூலை 7ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கியது. 3,119 மையங்களில் 8.85 லட்சம் மாணவர்கள் தேர்வெழுதுகின்றனர்.
Categories